Wednesday, May 15, 2019

ஆணவம்



அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் சற்று பிந்திவிட்டதால் இன்றுதான் இருட்கனி-30 வாசித்தேன். அதில் ஓர் இடம் வருகிறது,
//
வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அளிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

“ஆணவ அழிவு என்பது பேருவகை என்றல்லவா கேட்டிருக்கிறேன்?” என்று மரங்களுக்கிடையிலிருந்து ஒரு பெண்குரங்கு சொன்னது.

//

”மெய்யறிவு ஆணவத்தை அழிக்கிறது” என்றுதானே வரவேண்டும்? தொடர்ந்து வரும் சொற்றொடர்களும் ஆணவ அழிவைக் குறித்தே பேசுகின்றன. தட்டச்சுப் பிழையாக இருக்கலாம் என்பதால் கேட்கிறேன்.

பாரி.


அன்புள்ள பாரி

ஆம் நீங்கள் சொல்வது சரி

திருத்திவிட்டேன்.

‘இன்பம்’ என்பது ஆணவத்தின் ஒரு வடிவம்

மெய்யறிவால் ஆணவம் அழிகையில் இன்பமும் அழிகிறது

எஞ்சுவது இன்ப துன்பம் அற்ற பெருநிலை என்பது பொருள்

ஜெ