அன்பின் ஜெ,
இன்றைய அலுவல இடைவேளையில் குருதிசாரல் செம்பதிப்பை பிரித்து கண்ணில் தென்பட்ட பக்கத்தை படிக்க ஆரம்பித்தேன்.
"சஞ்சயா, பீமனிடம் சொல், என் மைந்தரைக் கொல்லலாகாதென்று. என் மைந்தர் களம்பட்டுக் கிடப்பதைக் காணும் தீப்பேறை எனக்கு அளிக்கலாகாதென்று".
இதோ, இன்றைய (நீர்ச்சுடர்- 24) அத்தியாயத்தில் துரியனின் சிதை சாம்பல் மேல் விழுந்து உழன்றுகொண்டிருக்கிறார்.
ஊழின்பால் முன்னரே வகுக்கப்பட்ட தருணங்கள்.
-யோகேஸ்வரன் ராமநாதன்.