Saturday, October 11, 2014

இன்றைய வாசகர்கள்



ஜெ



உங்கள் தளத்தில் என் தப்பும் தவறுமான தமிழ் வருவதை பார்த்தால் எனக்கு வெட்க்கமாக இருக்கிறது.

உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கரையில் இது உபயோக படும் என்று எண்ணி அஞ்சல் அனுப்பி இருந்தேன். அடுத்த நாளே தளத்தில் மாற்றம் இருப்பதையும் கண்டேன். மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதெ அஞ்சலை இன்று பொதுவாக எல்லொருக்குமாய் தளங்களை தொகுத்து அறிவிக்க பதிவு செய்துள்ளீர்கள்.

ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கிறீர்கள். அதர்க்கு மதிப்பிர்குரிய கவனமும் பதிலும் உரித்தாகின்றன. உங்கள் உழைப்பு பிரமிமிக்க தக்கது. அதை விட என்னை போன்றவர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியதும் கூட.

நம் நலனுக்காய் ஞானத்தை அளிப்பவர்களும், அதன் வழியை அளிப்பவர்களும் குருவாகிரார்கள். அந்த இடத்தில் இருப்பவரை முகத்திர்க்கு நெரே புகழ்வதில் தவரில்லை. அவரின் நலம் காண்பதும் எங்கள் கடமையாகும். உழைப்பொடு உங்களையும், உடல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள் ( நீலம் எழுதிய நாட்களை படிக்கும் பொழுது நீங்கள் குறிப்பிட்டவைகளை புரிந்து கொன்டாலும் - தற்கொலை பொன்றவைகளை நினைக்கும் பொழுது கவலை குடிகொள்கிரது. I would assume you get what I mean. Please take care sir). 

தவிர சிறுபிள்ளை தனமாக மீசை பற்றி எழுதியதை தளத்தில் வராது காத்ததர்க்கு நன்றி  ஆனால் கருத்தில் மாற்றம் இல்லை. மறுபடியும் அதிக பிரசங்கம் இருந்தால் மன்னியுங்கள்.

நன்றி
வெ.ராகவ்



அன்புள்ள ராகவ்

கடிதங்களை வாசிப்பது எனக்கு என் நாவல் எப்படி சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது. கூடவே நான் எழுதிக்கொண்டிருக்கும் மனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆகவே கடிதங்களை தவிர்ப்பதேயில்லை

அத்துடன் இலக்கியமென்பது ஒருவர் எழுத ஒருவர் கேட்கும் செயல் அல்ல. அனைவரும் சேர்ந்து செய்யும் ஒரு பெருஞ்செயல். நான் வெண்முரசு எழுதும் நாட்களில் என் குழுமத்து நண்பர்களிடம் கேட்டிருந்தேன். குறைந்தது ஐம்பதுபேராவது கடைசிவரை வாசிக்கவேண்டும் என்று. இன்று எல்லாவற்றிலுமாக கிட்டத்தட்ட 50000 பேர் இணையத்த்தில் வெண்முரசை வாசிக்கிறார்கள். என் இணையதளத்தின் ஒருநாள் வருகை என்ணிக்கை லட்சத்தை தாண்டிவிட்டதுதை நண்பர்கள் காட்டினார்கள் [ஆகவே பெரும் செலவும் ஆகிறது]

ஜெ



அன்புள்ள ஜெ சார்

எனக்குத்தெரிந்து உங்களை பரவலாக அனைவரும் வாசிப்பதே வெண்முரசு வந்தபிறகுதான். வாசிப்புக்குப் பெரிய சவாலாகவும் உள்ளது. கூடவே அனைவரும் விடாமல் வாசிக்கும் ஈர்ப்பு உள்ளதாகவும் இருக்கிறது. என் குடும்பத்திலுள்ள பெண்களெல்லாம் வாசிக்கிறார்கள். ஒருவர் கூட இணையத்தில் வரும் வேறு எதையுமே வாசிப்பதில்லை. நீங்களே எழுதினாலும் வாசிப்பதில்லை

சிவராம்

அன்புள்ள் சிவராம் 

ஆம் ஆச்சரியமான விஷயம்தான். என் இணையதளத்தில் வரும் புனைவுகளை மட்டுமே வாசிக்கும் பெரும் கூட்டம் உள்ளது. அவர்களில் அதிகம் பெண்கள்.

என் மனைவி அதைப்பற்றிச் சொன்னாள் - பெண்களுக்கு அறிவும் ருசியும் அதிகம் என்று