Friday, October 3, 2014

ராதாகிருஷ்ண பாவம்




அன்புள்ள ஜெ சார்

ராதாகிருஷ்ண லீலையை நீலத்திலே வாசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் நான் ராதாகிருஷ்ணபிரேமையை இந்நாவலை வாசிக்கும்முன் இப்படி உணர்ந்தது கிடையாது. நம்மூரில் பெருமாள் என்றால் விஷ்ணுதான். கிருஷ்ணன் இரண்டாம்பட்சம்தான். ராதை கிடையாது

ஆனால் வட இந்தியாவில் கிருஷ்ணனும் ராதையும்தான் தெய்வமே. ஒரிசாவில் நான் இருந்தபோது அங்கே ராதே ஷியாம் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். ராதை ஒரு இடத்தில் கண்ணனை நீ கனசியாமன் என்று சொல்லும்போது தான் அந்த சொல்லை புரிந்துகொண்டேன்

பங்கால், ஒரிசா பிகாரில் ராதா கிருஷ்ணா பக்தி என்பது எங்குபார்த்தாலும் காணக்கிடைக்கிறது. சாதாரண மக்கள்கூட பஜனைகளை தெரிந்துவைத்திருக்கிறார்கள்.  பஜனைகள்தான் எங்குபார்த்தாலும் நடக்கும். அதைக்கேட்பதே பெரிய அனுபவம். பலர் நன்றாகப்பாடுவார்கள். என் ஆபீஸில் இருந்த சப்ராஸி கூட மிகச்சிறப்பாக பாடுவார்

கடிதங்கள் மிக உதவியாக இருந்தன. கடலூர் சீனு எழுதிய ஒரு வரி எனக்குப்பிடித்திருந்தது. கண்ணனை அறிய ராதைக்கு பல பிறவிகள் தேவைப்படுகிறது

சிவகுமார்

மரபின்மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் பற்றிய தொடர்