அன்புள்ள ஜெ சார்
நீலம் முடியும்போது கண்ணன் ராதையின் சிலைமுன் குழலூதும் காட்சியை வாசித்துவிட்டு அந்த எண்ணத்திலேயே இருந்தேன். அதன்பிறகு கண்ணனுக்கு ராதை குழலை எடுத்துக்கொடுக்கும் அத்தியாயத்தை வாசித்தேன்.
பலராமனுக்கு கிருஷ்ணைன் இசை கேட்கிறது. அவன் அது என்ன சொல்கிறது என்று சொல்கிறான்
அதே இசை!” என்று பலராமன் வியந்தான். “என்ன சொல்கிறது மூங்கில்?” என்றான். “என்ன சொல்கிறது? நீயே சொல்” என்று அதை மீண்டும் வாசித்தாள். பலராமன் “வரமாட்டாயா என்று சொல்கிறது” என்றான். “அப்படியா சொல்கிறது? அதுவும்தான் காத்திருக்கிறதா?” என்ற ராதை மீண்டும் வாசித்து “இப்போது?” என்றாள். “இப்போதும் அதையேதான் சொல்கிறது” என்றான் பலராமன்
அதைத்தான் கடைசியிலும் பார்க்கிறோம். கடைசியில் காத்திருக்கிறவள் ராதை இல்லை, கண்ணன் தான். அவளுடைய சன்னிதியில் வந்து நின்று அவன் பாடுவது அதைத்தான்
முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை
அந்த வதையை ராதை கடந்துவிட்டால். கிருஷ்ணன் அனுபவிக்கிறார் .
ஸ்ரீராம்
மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்