அன்புள்ள ஆசிரியருக்கு
இந்த நாட்களில் 'முடிவின்மையின் விளிம்பில்' நினைவுக்கு வந்ததா ? இன்று எனக்கு டைட்டசும் அதீனாவும் க்ளாரின்டாவும் கண்ணனும் ராதையும் ராமகிருஷ்ணராகவுமே தெரிகிறார்கள்.
மது
அன்புள்ள மது
நீங்கள் சொன்னபிறகுதான் அந்த மறைமுகத்தொடர்பு நினைவுக்கு வருகிறது.
ஜெ
அன்புள்ள ஆசிரியருக்கு
நீலம் படித்தபின் அஷ்டபதி பாடல்கள் இன்னும் நெருக்கமாக இருக்கின்றன. மொழி என்ற தடையை தாண்டி இசையாலும் அனுபவத்தை பெற முடிகிறது.
ராதை கேட்கும் 'தைஜஸ்ரீ' போன்ற பழைய ராகங்களை தேடிக்கொண்டிருந்தேன், கிடைக்கவில்லை. நீங்கள் பதிவேற்றிய பாடல்களில் அந்த ராகம் இருக்கிறதா ?
நன்றி
மது
அன்புள்ள மது
ராகங்களைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த இந்துஸ்தானி ராகங்கள் பின்னர் பலவகையாக பெயர்மாற்றம் பெற்றுவிட்டன என்கிறார் நண்பர் ராமச்சந்திர ஷர்மா
நீங்கள் இசை தொடர்பான நபர்களிடம்தான் விசாரிக்கவேண்டும்