Friday, October 3, 2014

யோகம்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

    சார்,

நீலம் ஒரு யோக நூல்.  இயற்கையின் மகத்தான கொடைகளான மலர்களும் நதிகளும் மரங்களும் மலைகளும் சூழ்ந்த இனிய வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பூத்து குலுங்கும் இனிய வசந்த பருவமான     இளமையில் ஓர் கன்னி  அறியும் தனிமையும் துக்கமும் இனிமையும் பித்தும் கோபமும் பிரிவும் காமமும் ஊடலும் முடிவில் பேரமைதியும் எனஎன்றும் மாறாத  காதலின் வழியே  அந்த மகத்தான சக்தி தன்னை குழந்தையாகநண்பனாக,   காதலனாககுருவாக காட்டுகிறது.  இறுதியில் கன்னி அன்னையாகிஅந்த மாபெரும் இறை எனும் சக்தியையே ஏங்க வைக்கிறாள் .
 தன்னை தாண்டிச்சென்ற தன் இணையைத்தேடும் ஒற்றைக் கருங்குயிலாக குழல் இசைத்து நிற்கிறது,அந்த பிரபஞ்சத்தின் ஒரு துளி. 

மனிதமனம் எப்போதும் விழிப்பு [ஜாக்ரத்] நிலையில்தான் தன்னை அறிந்துகொண்டிருக்கிறது. அதற்கு அடியில் ஆழ்மன [ஸ்வப்ன] நிலையை அது அவ்வப்போது சென்று தொட்டுக்கொண்டு மீள்கிறது. அதற்குமப்பால் சுஷுப்தி நிலையில் மானுட அகம் தன்னை பிரபஞ்சத்தின் ஒரு துளியாக உணர்கிறது. துரிய நிலையில் அது பிரபஞ்சமாகவே உள்ளது. இந்து ஞான மரபில் ஆழ்மனம் என்பது ஸ்வப்ன,சுஷுப்தி என்னும் இரு அடுக்குகள் கொண்டது. துரியம் என்பது மனமற்ற நிலை.

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத்என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.
ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமிநுரைஅலை என்றுவைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது.  அதாவது கடல்தான்இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

             நீங்கள் தியானம் பற்றி சொன்னவற்றின் படி,  நீங்கள் நீலம் எழுதிய காலகட்டத்தில் உங்கள் ஜாக்ரத் எனும் விழிப்பு மனம்  விலகி ஸ்வப்னம் எனும் கனவு மனதில் வாழ்ந்திருக்கிறீர்கள். தர்க்கம் விலகி கனவும் பித்தும் ஞானமும்  கொண்ட நாட்களில் தர்க்கத்தையதார்த்த வாழ்வைவிடாமல் பிடித்துகொண்டு ஆயிரம் பேர் நடுவிலும் மகத்தான தனிமையில்  இருந்திருக்கிறீர்கள்.
  
   பிரக்ஞை நிலை விலகும் தருணத்தில் தோன்றும் அதீதமான கனவுகள்வாசனைகள் ,தோற்றங்கள்  என அனைத்தும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உங்கள் தன்னுணர்வாலும்   தர்க்கத்தினாலுமே நீங்கள் அதை தாண்டி வந்திருக்கிறீர்கள்.
   
  சுஷுப்தி நிலையினைஆனந்த பெரும் வெளியினை,   துரியம் எனும் இன்மையினை அடைந்தும் இருக்கலாம் , அடைவதை நீங்களாகவே தவிர்க்கிறீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.  

  இந்நூலை படிக்கும் நாட்களில்ராஸலீலை அத்தியாயங்களில்  பொங்கி எழும் மன எழுச்சியில்  ஒருவித துயரமும்இறுதி அத்தியாயங்களில் கிருஷ்ணரின் ஒற்றை குயிலின் இணை தேடும் ஏக்கமும் துயரமும் தனிமையும் நிறைந்த  குழலோசை விடுதலை உணர்வையும் தந்துவினோதமான  எதிர் எதிர் உணர்வுகளை அடைய நேர்ந்தது

        இப்படி ஒரு நடைஇப்படி ஒரு மொழி சாத்தியமா...

ஒவ்வொரு சொற்களும் எளிய வாசகனுக்கு தருகின்ற வெளிப்படையான அர்த்தங்களும்அவைஅனைத்தும் யோகம் அறிந்தவர்களுக்கு வேறு விதமான அர்த்தங்களையும்நிலைகளையும்சுட்டிக்காட்டுபவையாகவும் இருக்கின்றன.

        கொந்தளிக்கும்  மொழிநடையில்ஞானியின்சொற்களில்குரு உபதேசம்

        உச்சத்தில் இருக்கிறீர்கள்இனி படி இறங்கி வரவேண்டியது தான். இது ஒருவித துயரமும் கூட.

நீங்கள் சொன்னது போல அலைகளையே குருவென அறிகிறோம்குரு என்பவர் கடல். கடற்கரையில்நின்று கொண்டு அலைகளின் நீர்த்திவலைகள் மேலே விழுவதை சிலிர்ப்புடன் ஏற்றுகொள்கிறோம். ஆயினும் அவ்வலைகளை தாண்டி கடலின் கொந்தளிப்புகளை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க நேர்கிறது. உங்கள் அகக்கொந்தளிப்புகளை மாபெரும் காலம் சமப்படுத்தும். மீண்டும் ஆழ்கடல் என நிறைய வாழ்த்துக்கள்.

நீலம் பிரபஞ்ச பேரிருப்பைஇன்மையினை சென்று தொடும் ஒரு நூல்மானுட மனம் அதன்புலன்களின் வழியாகவே  பிரபஞ்சத்தின் ஒரு துளியை உணரும் ஒரு வாய்ப்பு.

                 யுகங்களுக்கு ஒரு முறை எழுதப்படும் நூல்.  .

வணக்கங்களுடன் ,
பரமேஸ்வரன்.