திரு ஜெமோ
வணக்கம்
நீலம் என்கிற உங்கள் நாவலை நட்சத்திர விடுதியின் விலை உயர்ந்த அறையில் இருந்து எழுதியதாகச் சொல்கிறீர்கள். ஏழை இந்தியாவிலே இலக்கியவாதிகள் நட்சத்திர ஓட்டலில் இருந்து இலக்கியம் எழுதுவதைப்போல கேவலம் உண்டா? நீங்கள் எழுதிய இந்த இலக்கியத்தால் ஏழைப்பாமரர்களுக்கு என்ன பயன்? அவர்கள் இந்த நட்சத்திர ஓட்டல் எழுத்தை ஏன் வாசிக்கவேண்டும்? உங்களைப்போன்ற முதலாளித்துவ எழுத்தாளர்கள் வாழும் இடத்திலேதான் முற்போக்கு எழுத்தாளர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் சிறந்த படைப்புகளை எழுதுகிறார்கள்
பிரேம்குமார்
அன்புள்ள பிரேம்குமார்
‘ஏழைப்பாமரர்க’ளுக்கு இதனால் பயனில்லை. அவர்கள் இதை வாசிக்கவும் வேண்டியதில்லை. அவர்கள் நீங்கள் சொல்லும் முற்போக்கு எழுத்துக்களை வாசிக்கட்டும். அரசியல் விழிப்புணர்ச்சி அடையட்டும். புரட்சியைக் கொண்டுவரட்டும். சமத்துவ சுந்தர பொன்னுலகை அமைக்கட்டும். அங்கே பாலாறும் தேனாறும் ஓடட்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும்
அந்த வாழ்க்கை அமைந்தபிறகு அவர்கள் நீலம் வாசிக்கட்டும். தோழர் கிருஷ்ணனின் லீலைகள் அவர்களுக்குப்பிடிக்கும்.
அதுவரை இங்கே மொழியில் நீலம் காத்திருக்கும். சரியா?
ஜெ
[பிகு. கிரீன்பார்க்கிலேதான் மாநாடுகளுக்கு வரும் தோழர்களும் தங்குகிறார்கள். பொன்னுலகை ஆள்வதற்குப் பயிற்சி எடுக்கிறார்கள் என நினைக்கிறேன்]
மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்