ஜெ
படிப்படியாக விரிந்து வரும் கிருஷ்ணனின் குணச்சித்திரம் ஆச்சரியம் அளிக்கிறது. சாதாரணமான யாதவ வீரனாக வருகிறான். உடனே ராஜதந்திரி. உடனே சின்னஞ்சிறுவனாக மனம் மயக்குகிறான்
அர்ஜுனன் தேடிய குரு அவனுக்கு நண்பனாகவே வரமுடியும். அந்த நண்பனை அவனால் புரிந்துகொள்ளமுடியும். அப்பாவாகவும் அம்மாவாகவும் ஆசிரியனாகவும் அண்ணனாகவும் வந்த குருநாதர்கள் எல்லாரும் தோற்றுவிட்டார்கள்
இறைவன் பக்தனுக்கு எல்லா தோற்றத்தையும் அளிப்பான். அர்ஜுனனுக்கு மட்டும்தான் தோழனாக வந்தான் என்ற வரியை சின்னவயசிலேயே கேட்டிருக்கிறேன். ஆனால் அதை உண்மையான வாழ்க்கையாக காண்பதுபோல வாசிப்பது அற்புதமான அனுபவம்
என்னுடைய அனுபவம் அதற்குச் சமானமானது. நான் கல்லூரியில் எஞ்சீனியரின் மேல்படிப்பு படித்தேன். ஆனால் யாருமே எனக்கு குரு கிடையாது. நான் மேனேஜ்மெண்டிலேதான் சேர்ந்தேன். அங்கே எனக்கு இம்மீடியட் சீனியராக இருந்த வங்காளி ஒருவர்தான் எனக்கு குரு. நண்பன். குடி சிகரெட் தொழில் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தான்
சிலவருடங்கள் முன்பு மறைந்த என் நண்பனை- ஆசானை இந்த அத்தியாயத்தில் நினைத்துக்கொண்டேன்
வெங்கட்ராமன்