ஜெ சார்
நேற்று [பிரயாகை 35] நடந்த விவாதங்களை பார்த்துக்கொண்டே இருந்தேன். உண்மையில் என்ன முடிவு எடுப்பது என்று அவர்களை விட எனக்கே பரிதவிப்பாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பம் மகாபார்தத்தில் இல்லை, நீங்கள் உருவாக்குவது என்று நினைக்கிறேன்
துரியோதனன் செய்தது சரி. குருநாதருக்கு அவன் உதவியே ஆகவேண்டிய இடம் அது. உதாவாவிட்டால் அவன் உயிரோடு இருப்பதற்கே அர்த்தம் இல்லை
அதேசமயம் விதுரரும் தர்மனும் சொல்வதும் சரிதான். ஒருவனின் சபதத்துக்காக நாட்டையே அழிக்கக் கூடாது. அவர்களின் பொறுப்பு நாட்டு மக்களிடம்தான்
ஆனால் துரியோதனன் சிறுமைப்படுத்தப்பட்டார். சபையில் அவர் கண்ணீருடன் தர்மரிடம் பேசும்போது என்ன ஆனாலும் சரி இவரை அவர்கள் கைவிட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.
இதற்கு பதிலே இல்லை. இரண்டுபக்கமும் ஆழமான பள்ளம். இதுவரை வாசித்ததில் மகாபாரதத்தில்- அல்லது வெண்முரசில்- மிகவும் கஷ்டமான இடம் இதுதான். அதாவது தர்மசங்கடம் இதுதான்
சிவராம்