அன்புள்ள ஜெ,
வேறு வழியே இல்லை - தேய்வழக்கையே துணைக்கழைக்கிறேன் - பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம். இன்றைய பகுதி [ பிரயாகை 24] காவியம் என்பது எப்படி எழுதப்படுவது என்பதை தற்கால் வாசகனுக்கு கச்சிதமாக உணர்த்தும்வகையில் அமைந்துவிட்டது. ஜரனின் புன்னகையில் தொடங்குகிறது காவியம். படிக்கப்படிக்க சாத்தியங்கள் விரிய மேலே மேலே என உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வரியாக என் மகனுக்கு படித்துக்காட்டிக்கொண்டே சென்றேன்.
உங்கள் கைவண்ணத்தில் வளர்ந்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் காவியம் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை!
sசீனிவாசன்