ஜெ,
இப்போதுதான் பிரயாகையைத் தொடர்ந்து வெண்முகில்நகரம் வாசித்து முடித்தேன். வடிவரீதியாகப்பார்த்தால் பிரயாகை வெண்முகில்நகரம் 19 ஆம் அத்தியாயத்தில்தான் முடிந்திருக்கவேண்டும். பிரயாகை என்ற சொல்லுக்கு பொருள் தரக்க்கூடிய ஐந்து சந்திப்புகள் நடப்பது வெண்முகில்நகரத்தில்தான்
நீளம் காரணமாக அடுத்த நாவலாக ஆக்கிவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அதுவும் சரிதான். பின்னர் ஒரே நாவலாக இரண்டையும் ஆக்கி பிரயாகை என்று பொதுவான பெயர் சூட்டிவிடலாமென நினைக்கிறேன்
பாஞ்சாலியின் குணச்சித்திரம் இந்த நாவலில் வந்த அளவுக்கு என் வாசிப்பில் எந்தப்பெண் கதாபாத்திரமும் எந்த நாவலிலும் வந்ததில்லை என்று துணிந்துசொல்வேன். ஒருபக்கம் அவள் பெண். மறுபக்கம் அவள் தெய்வம். ரெண்டுமேதான்
பாஞ்சாலி தனக்கு பாரதவ்ர்ஷமே போதாது என்று சொல்லுமிடத்தில் அவளுடைய குணாதிசயம் மூர்க்கமாகவும் முழுமையாகவும் வெளிப்பட்டுவிடுகிறது
அருணாச்சலம்