Tuesday, March 3, 2015

சிற்பம்



ஜெ

சிறுகச்சிறுக பாஞ்சாலியைச் செதுக்கி ஒரு முழுமையான சிற்பமாக ஆக்கிவிட்டிருக்கிறீர்கள். பலதடவை பல இடங்களை வாசித்துத்தான் அந்தச் சித்திரத்தை முழுமையாக்கிக்கொள்ள முடிகிறது. நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது

குறிப்பாக ஒவ்வொரு கதையும் சரியாக பாஞ்சாலியின் ஒரு குணாதிசயத்தை விளக்குவது அற்புதம். பிரயாகையில் வரும் தபதியின் கதைதான் தொடக்கம். அதன்பின் இங்குள்ள ஒவ்வொரு கதையிலும் ஒரு நுட்பம் உள்ளது. ஈடிப்பஸ் காம்ப்ளெக்ஸ் முதல் தாய்மையின் பல பாவனைகள் வரை. அதேபோல பெண்ணின் எல்லா ஜாலங்களையும் அந்தக்கதைகள் காட்டுகின்றன

பாஞ்சாலியை இனி ஒரு வரிகூட சொல்லாமல் அப்படியே கதையை முடிவுக்குக்கொண்டுவந்தாலும்கூட அவள்தான் வெண்முரசின் மிகப்பெரிய கதாபாத்திரம் சந்தேகமே இல்லை

ஜெயராமன் எஸ்