ஜெ
ஒவ்வொரு அழகியையும் கூர்ந்து கவனிக்கிறேன்
தேவிகை- உற்சாகமான பெண். சிறிய நாட்டின் இளவரசி. உலகமறியாதவள். ஆகவே துணிச்சலானவள். கன்றுக்குட்டிமாதிரி இருக்கிறாள். அரசியல் ஏதும் தெரியாது. சின்னஞ்சிறிய அரண்மனைக்குள் சிறையிருக்கிறாள். ஒரு தேவன் வந்து வெளியே கொண்டுசெல்வான் என நினைக்கிறாள்.
விஜயை- கொஞ்சம் அரசியல் அறிவு கொண்டவள். கொஞ்சம் அரசியல் கனவுகளும் உள்ளன . சதிகளைப்புரிந்துகொள்வாள். ஒரு அரசிக்கு உரிய குணாதிசயசயங்கள்
பிரேமை: காட்டுப்பெண். ஆனால் தைரியமானவள். எதையும் தாங்கும் வல்லமை கொண்டவள். காட்டரசி
துச்சளை: ஒரு சாதாரணமான பெண். அரசிக்குரிய எந்த அம்சமும் இல்லை. எந்ததந்திரமும் தெரியவில்லை. ஆண்களிடம் கெஞ்சுகிறாள். உதவி கேட்கிறாள். ஒரு குடும்பப்பெண்ணாக மட்டுமே இருக்கிறாள்
இருப்பதிலேயே பேரரசி என்றாள் துச்சளைதான். அவள்தான் குடும்பப்பெண் மட்டுமாக இருக்கிறாள்!
ராஜசேகர்
வண்ணக்கடல் பற்றி கேசவமணி
மழைப்பாடல் பற்றி கேசவமணி