ஜெ
ஒவ்வொருநாளும்
எழுதும் ஓர் உரைநடையை இத்தனை செறிவாக சொல் சொல்லாக எப்படிச் செதுக்கமுடிகிறது
என்று ஆச்சரியப்படுகிறேன். இன்று முழுக்க இந்த ஒரு பத்தியை சிந்தனைசெய்தபடி
அமர்ந்திருந்தேன்
இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க! மீனுக்கு நீரும், புழுவுக்கு வளையும், மானுக்கு நிலமும், குரங்குக்கு மரமும், பறவைக்கு வானும் எல்லைகளாக வகுக்கப்பட்டுள்ளன. மானுடனுக்கோ அச்சங்களும் ஐயங்களுமே எல்லையை சமைக்கின்றன
.
ஒவ்வொரு தளையாக வென்று, தானெனும் இறுதித் தளையை அறுத்து அப்பால் செல்பவனுக்குரியது இங்கென திகழ்ந்து எங்குமென காட்டி அங்கிருக்கும் அது
எதில்
வாழ்கிறோமோ எதில் உறைகிறோமோ அதுதான் தளை என்பது எவ்வளவு பெரிய சொல். மீன் கடலிலும்
பறவை வானத்திலும் வாழ்வதுபோல மனிதன் நீந்தியும் பறந்தும் திளைத்து வாழ்வது
அச்சங்களிலும் ஐயங்களிலும்தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை
இது ஒரு
மானசீகமான சன்னதத்துக்கு ஆளானால் மட்டுமே எழுதக்கூடிய வரி
மனோகரன்