அன்புள்ள ஜெ,
பூரு தேவயானியைப்பார்க்கச்
செல்கிறான். பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறான். ஆனால் உடனே அவன் அடைந்த அந்த முதுமை
அவனுக்கு உதவுகிறது.
இருக்கிறேன்
என்னும் சொல்லாக அவன் சித்தம்
உருமாறியது. உடல்வலு உள்ளத்திற்கு அளிக்கும்
செய்தியே அதுதான்
என்ற வரி ஒருவன்
முதுமையை அடைந்தால் மட்டுமே கிடைப்பது. அதன்பின் நிகழ்காலத்தின் மதிப்பு தெரிகிறது
எத்தனை
நோக்கினாலும் தீராதது. எத்தனை அள்ளிச்சேர்த்தாலும் தொடப்படாமல்
எஞ்சுவது. இக்கணம் அன்றி எதுவும்
பெரிதல்ல. இது நழுவிக்கொண்டிருக்கிறது. சென்றுகொண்டே இருக்கிறது.
இவற்றில் ஓரிரு துளிகள் மட்டுமே
மிஞ்சவிருக்கின்றன. பிறிதெல்லாம் வெறும் உளமயக்குகள், உணர்வுநாடகங்கள்.
கடந்து திரும்பி நோக்கினால் எளிய இளிவரல்கள்
இந்த ஞானத்தைத்தான்
அவன் முதியவனாக ஆகி அடைந்திருக்கிறான் என நினைக்கிறேன்
மனோகர்