அன்புள்ள ஜெ
மாமலரில் மனோநிலைகள் சொல்லப்பட்டுள்ள நுட்பமான வழிகளைப்பற்றி
நினைத்துக்கொண்டிருக்கிறேன். சில இடங்கள் நீண்ட நினைவோட்டமாக வருகின்றன. சில இடங்கள்
விரிவாகச் சொல்லப்படுகின்றன. சில இடங்கள் குறிப்புணர்த்திச்செல்லப்படுகின்ரன
உதாரணமாக யயாதி சர்மிஷ்டையை காதலித்ததையும் சந்தித்தையும்
கூறும் இடம். நீண்ட மொனோலாக் ஆகச்சொல்லப்படுகிறது. ஆனால் ஏன் அவன் அபப்டிச் சொல்கிறான்
என்பது அவன் கடைசியாகக் கண்ணாடிபார்த்துச் சொல்லிக்கொள்வதில் இருக்கிறது. அவன் சொன்னதெல்லாம்
உண்மைதான். ஆனால் அந்த உண்மையெல்லாம் பிறிதொரு எளிமையான உண்மையை மறைப்பதற்காகத்தான்.
நீளமாகப்பேசுபவர்களின் பேச்சில் ஒன்று எங்கோ ஓளிக்கபப்ட்டிருக்கும்
அந்த ஒளிந்த விஷயம் என்ன என்று அவன் இளமையை கோரிப்பெற்றபோது
தெளிவாகியது. அதைநோக்கித்தான் அந்த உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சும் பேச்சுக்கு
அடியிலும் என்று வளரும் அந்த இடம் முக்கியமனது
மகேஷ் ராஜாராம்