அன்புள்ள ஜெ,
துரியோதனன் தன்னை
அளிக்கும் பலிச்சடங்குகள் கொடூரக்கலை என்பதன் அடையாளமாக இருந்தன. குமட்டலும் அருவருப்பும்
ஏற்படுத்துபவை. ஆனால் இவையெல்லாம் இன்றுகூட ஏதேனும் வடிவில் நீடிக்கின்றன. காசுவெட்டிப்போடுதல்
முடிசிரைத்து நெருப்பில் போடுதல் நீரில் மூழ்கி தலைமுழுகுதல் போன்றவை. மாசாணியம்மன்
கோயிலில் மிளகாய் அரைத்துப்பூசுதலும் இப்படிப்பட்ட சடங்குதான். மகாபாரதகால மனநிலையில்
இருந்து நம் சமூகம் இன்னமும்கூட வெளியே வரவேயில்லை என நினைக்கிறேன்
சங்கரராமன்