Tuesday, January 30, 2018

சூரியன்



அன்புள்ள ஜெ ,


ஒளி தந்து  இருளில் மறையும்  சூரியன் போல துச்சளை வந்து செல்வது இருந்தது , அவள் துரியோதனனை  காணும் முன்புவரை  பிரகாசமாக  இருந்தாள்.
கலிசுனை காகவிழி போல இருந்தது என படிக்கும் போதே ஜில்லிட்டது  , இன்றும்  அது தொடர்ந்தது  ,அதிலிருந்து வெளிவந்த காகங்களும்  கருநாகங்களும்  பலி  பெறாமல் திரும்ப செல்லாது என தோன்றியது .

இருட்டு நம் அசைவை  இன்னொருவருக்கு  காட்டாது  ,அந்த கட்டுப்பாடற்ற   சுதந்திரம்தான் கலி ஒருவருக்கு  தருகிறான்  என தோன்றுகிறது , மக்களிடம் இருந்த ஆர்வம் அதை காட்டியது என நினைத்தேன் .

கலிசுனை ஒரு நோக்கில் போர்க்களம்  என நினைத்தேன் , நரிகளை பாண்டவர்களாக  , அவர்கள் வாழிடத்தில் கலி கண் விழிப்பதாக  எண்ணினேன் 

ராதாகிருஷ்ணன்