Sunday, November 2, 2014

வெற்றியின் வீழ்ச்சி


[மகாபாரத ஏட்டுப்பிரதி- புரூக்லின் மியூசியம்]


அன்புள்ள ஜெ

பிரயாகை வேகமாகச் செல்கிறது. துருவன் நிகழ்வில் பல மடிப்புகள். இரட்டை நக்ஷத்திரங்களுடன்.

துரோணரின் அறிவும் ஞானமும் ஒரு பகுதியில் வெளிப்பட.. மறுபுறம் அவரது புரிந்தும் புரியாமனாலும் இருக்கும் மனக் காயங்கள் - அதற்கு அவர் தேடும் ஆறுதலின் சிக்கல் - சுவாரசியமானது - ஆழமானது - பல விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது 

அர்ஜுனனின் சொல்லப் படும் வியூகம், அதன் ஓவியம் - ஜப்பானிய ஓவியம் போலிருந்தது. அற்புதம்.

அர்ஜுனனின் ஒருபுறம் அதீத திறமையும், மறு புறம் தன்னைப் பற்றிய ஒரு கூர்ந்த பார்வையுடன்.. துரோணரின் நாடகத்தில் தான் ஒரு பாத்திரம் மட்டுமே என்கிற அறிவு..மிகச் செறிவாக உள்ளது. வெற்றியின் வீழ்ச்சியை அவனே அறிய ஒரு வாய்ப்பு. இதே குழப்பம் மீண்டும் மீண்டும் வருகிறதோ! இது அர்ஜுனனின் பாத்திரத்திற்கு ஒரு அழுத்தம் தருகிறது. அன்றேல் அவன் ஒரு கொல்லும் இயந்திரம் ஆகி விடுவான் அல்லவா!

போர்காட்சிகளில் ஒரு  எழுச்சி .. எனக்கே ஆச்சரியமாக.. ஒரு புறம் கௌரவர்கள் மீது, பின் துருபதன் மீது, பின் பாண்டவர்கள் மீது.. எதோ ஒரு அடித் தளத்தில் காதலைப் போன்றே மனம் போரை விரும்புகிறதோ! காதலும் வீரமும் உளவியல் முக்கிய கூறுகள்  என படித்து தெரிந்து இருந்தாலும் .. அனுபவமாக உணர்ந்தேன்.

முக்கியமாக அறிந்த ஒன்று. பாத்திரங்கள் மிக அணுக்கமாக உரையாடுகிறார்கள். பீமன் - அர்ஜுனன், தருமன் - அர்ஜுனன், இது உறவு முறையின் ஆழத்தை புலப் படுத்துகிறது. பொதுவாக நான் படித்தவரை இந்த அளவு உரையாடல் மகிழ்வூட்டும் முறையிலும், சிந்திக்கும் அளவிலும், மனக் குழப்பங்களை உரையாடியும் கண்டதில்லை. இது பல தளங்களில் வாசகருடன் இணைகிறது. மீண்டும் வாசிப்பது புதிய அனுபவமாகிறது.

இசை அல்லது ஒரு டுயூன் கேட்பவரை பின் தொடர்வது போல  - ஒரு நாய் (குட்டி) அன்பு மனதை பின் தொடர்வது போல - வாசகரை எண்ணங்கள் அன்றாட வாழ்வில் பின் தொடர்கிறது. இனிய அனுபவமாக, புன்னகை தருபவனவாக - அவரவர் தாள கதியில் (அவரது சுவாரசியத்திற்கு ஏற்ப - ) - அதுவும் இணையத்தில் தொடர்வதின் முக்கியம் - புது அணுகுமுறை - பல முறை குறித்துள்ளேன். 

முக்கியமான உரையாடல்  கூட ஒரு புத்தகமாகலாம். பலருக்கு உதவியாக - சிலருக்கு - சினிமாவின் பின்னணி இசை போல - வாசக அனுபவத்தை கூட்டும் என தோன்றுகிறது.

வண்ணக் கடல் - நீலம் விழாவை எதிர் நோக்கி இருக்கிறேன்.

அன்புடன்

முரளி