Monday, November 3, 2014

எந்தக்கதாபாத்திரம்?




அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வணக்கம். தி ஹிந்து தீபாவளி மலரில் வெளிவந்திருக்கும் தங்களின் பேட்டியை வாசித்தேன். அதிசுவாரஸ்யமாக இருந்தது. சின்னதான கேள்வி ஒன்றும் என்னுள் உதித்தது. எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர்கள் உருவாக்கும் பல பாத்திரங்களில் ஏதோ ஒன்றின் மீது அதீதமான நெருக்கம் எப்போதும் இருக்கும். பாரதம் என்னும் பெருவெளியில் வியாசனைத் தவிர தங்களுக்கு நெருக்கமான அல்லது தாங்களாகவே உணர்ந்த பாத்திரம் என்று ஏதேனும் உள்ளதா ?

அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி


அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

மகாபாரதத்தை முழுமையாக வாசிக்கையில் நமக்குள் எழும் அனுபவமே அபடி எந்த ஒரு கதாபாத்திரம் மீதும் மனம் கவியாது என்பதே. அனைத்து நியாயங்களையும் பார்க்கவும் காலத்தின் ஒட்டுமொத்ததில் வைத்து திரட்டிக்கொள்ளவும் மட்டுமே அந்த காவியம் நம்மை தூண்டுகிறது

அதையே வெண்முரசும் செய்யவேண்டுமென நினைக்கிறேன்

ஜெ