ஜெ சார்
பிரயாகையில் அர்ஜுனனின் கதாபாத்திரம் வளர்ந்துகொண்டே வருகிறது
அவனை ஒரு அழகான குழந்தையாக நாம் பார்த்தோம். கூர்மையான கண்களுடன் பூச்சிகளைக்கூட பார்ப்பவன்
அதன்பிறகு இந்திரனின் மைந்தன் என்று செல்லப்பிள்ளையாக கண்டோம். அதன்பிறகு தீவிரமான மாணவனாக துரோணருடன் இருக்கிறான். குருமீது பொஸஸிவாக இருக்கிறான்
அப்படி அவன் வளர்ந்துகொண்டே வந்தான். அவனை இப்போது பார்க்கும்போது இன்னும் தெளிவாக இருக்கிறான்
அர்ஜுனன் பிறப்பிலேயே அப்பாவை இழந்தவன்.அம்மாவால் வளர்க்கப்படாத பிள்ளை. அவனுக்கும் குந்திக்குமான உறவைப்பற்றிய அத்தியாயங்கள் வண்ணக்கடலில் மிக நுட்பமானவை. அவளுக்கு அவன் தான் ‘ஆண்’ மகன். அகாவே அவனை அவள் நெருங்கவே விடவில்லை. தன் பலவீனம் வெளியே தெரியக்கூடாதென்று நினைக்கிறாள்.
அவன் அம்மாவுக்காக ஏங்கி ஏங்கி அழுது வளர்கிறான். அம்மாவுக்கு விதுரனுடன் ரகசியமான ஒரு அன்பு உண்டு என்று தெரிந்ததும் அவன் கோபம் கொள்கிறான். அதை அவன் எவ்வளவு நுட்பமாக ஊகிக்கிறான் என்று ஆச்சரியம்
அவன் விதுரனை வெறுக்கிறான். அம்மா அம்மா என்று ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அம்மா அவனை அண்டவே விடமாட்டாள்
அப்போதுதான் குரு கிடைக்கிறார். குருவையே தெய்வமாக எண்ணி வளர்கிறான். மற்றவிஷயங்கள் எல்லாமே சின்னதாகப்போகின்றன
ஆனால் துர்பதன் விஷயத்தில் குருவின் தோல்வி [ஆன்ம மரணம் என்று சொல்வார் என் குருதேவர்] கண்டதும் அவனுக்கு குருவும் இல்லாமலாகிறார்கள்
இப்போது என்ன செய்வான்? அவனுக்கு யாருமெ இல்லை. ஆகவேதான் அவன் விபசாரம் செய்கிறான்
அவனுக்கு மிஞ்சுபவர் அவனுடைய அண்ணன் மட்டுமே இன்றைக்கு அவன் அண்ணனை அண்டி நிற்பதைக் கண்டதும் அய்யோ இதாவது அர்ஜுனனுக்கு நிலைக்கணுமே என்று நினைத்துக்கொண்டேன்
சுதாகர்