பிரிய ஜெ ,
இளையவனே,
இந்தக் கட்டடங்கள்! இவற்றைப்போல நான் வெறுப்பது பிறிதில்லை. சதுரங்கள்
செவ்வகங்கள்… பார்க்கப்பார்க்க சலிப்பேறுகிறது. எத்தனை செயற்கையான
மடத்தனமான வடிவங்கள். அங்கே காட்டில் இந்த வடிவங்கள் எவற்றையுமே
காணமுடியாது. மலைகள் மரங்கள் எல்லாமே அவற்றுக்கான முழுமையில்தான் உள்ளன.
இங்குள்ளவர்களின் அகமும் இதேபோல குறைபட்ட வடிவங்களாகவே உள்ளன பார்த்தாயா?
இவர்கள் ஆடும் ஓலைகளும் சதுரங்கக் கட்டங்களும் எல்லாம் சதுரங்கள்தான்.”//
காடு நாவலிலும் இப்படியான ஒரு இடம் வரும்..
//ஆம்,
அவர் நம்மவர் என்பதனால் நமக்குகந்ததைச் சொல்வார். ஆகவே அது சரியாகத்தானே
இருக்கும்?” என்றான் பீமன். தருமன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.//
பீமனை எவரும் நிறுத்த முடியாது போலிருக்கிறது:)
சுனீல் கிருஷ்ணன்