Wednesday, March 11, 2015

மூன்று தத்துவங்கள்




Dear Sir,
Hope you are doing fine?
I have a little clarification, which I have even posted in group, but not got any reply.
In venmurasu, it has been said that Ambai had learned three thatuvum, six dharshans,six religions etc.,
Also I remember two or three instances, where this has been said.. (I think with Vithurar & Dharman)..
As per my understanding on reading your  blog, "Bhagawat Geetha" namely the third thatuvum, had emerged only during 2nd century AC and it has been inserted brilliantly in mahabharatha..
If so, then during Mahabharata period, it should be only two thatuvum  and not three!!!...
Or as you said in some other blog, principles of Geetha would have been preached for centuries together (Krishna might be one of the important guru of that principle).. Those principles would have analyzed in various forms and had consolidated in the form of Bhagavat Geetha during 2nd century..
Even if we assume the above, in what name the third thathuvum would be called during those days?..
Is it logical to say during Mahabharata there should be only two thathuvum (as the third one is not in final stage)
thanks
,
Ragu

அன்புள்ள ரகு

நால்வேதங்கள், மூன்றுதத்துவங்கள், ஆறுமதங்கள், ஆறுதரிசனங்கள் ஆகியவை அடங்கியது சனாதனதர்மம் அல்லது இந்துமதம் என்பது பொதுவாக எல்லா சிந்தனைமரபுகளாலும் வகுக்கப்பட்டது

ஆனால் இதை அதிகமும் முன்வைப்பவர்கள்  வேதாந்திகள். குறிப்பாக பிற்கால வேதாந்திகளானஅத்வைதம் விஷ்டாத்வைதம் துவைதம் ஆகியமரபைச்சேர்ந்தவர்கள்

ஆகவே அவர்கள் மூன்று தத்துவம் என்பதற்கு மூன்று நூல்களையே குறிப்பிட்டனர். உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம்,கீதை

அதையே நான் வேதாந்த விவாதங்களில் குறிப்பிடுகிறேன். அது மரபு என்பதனால்

ஆனால் அதில் சில முரண்பாடுகள் உள்ளன. மதங்கள், தரிசனங்கள் ஆகியவை நூல்கள் அல்ல. அவை ஞானமரபுகள், வழிகள். தத்துவங்களுக்கு மட்டும் நூல்களைச் சொல்வது சரியா என்று தெரியவில்லை

மேலும் அவை மட்டுமே மூலதத்துவங்கள் என்று கொண்டால் சாக்தம், சைவம் போன்ற மதங்கள் அவற்றை ஏற்பதில் சிக்கல் உள்ளது

ஆகவே சில மரபுகளில் மூன்று தத்துவங்கள் என்பதை மூன்று கொள்கைகள் அல்லது கருத்துருவங்கள் அல்லது அறிதல்கள் அல்லது இருப்புகள் என வகுத்துக்கொள்கிறார்கள்.  தத்துவம் என்ற சொல் இந்நான்கு பொருளையுமே அளிப்பது

பிரம்மம், ஆன்மா, முக்தி என்னும் மூன்றையும் மூன்று தத்துவங்கள் எனலாம். இம்மூன்றையும் அறிதலென்பதே இந்துமரபின் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது

ஜெ