Thursday, December 3, 2015

மாரன்



ஜெ

நேமி மாரனை எதிர்கொண்டார் என்று வருகிறது. மாரன் பௌத்த கான்ஸெப்ட் இல்லையா? சமணத்தில் மாரன் உண்டா?

சாமிநாதன்


அன்புள்ள சாமிநாதன்,

மாரன் இந்து சமண பௌத்த மதங்களுக்குப் பொதுவானவன். ஆனால் வேறுபாடுகள் உண்டு

சிவனின் தவத்தை அழித்து அதனால் எரிக்கப்பட்டு உடலில்லாமல் ஆனவன் இந்து மாரன். காமதேவன்.

ஜைனர்களின் மாரன் காமம் அகங்காரம் ஆகியவற்றின் மூர்த்தி. ஆனால் அவ்வளவாக முக்கியம் இல்லை. பாதாள உலகங்களில் உள்ள பலதெய்வங்களில் ஒன்றே

பௌத்தத்தில் காமம் மட்டுமல்ல அகங்காரம், இச்சை ஆகியவற்றின் மூர்த்தியாக மாரன் பேருருவம் கொள்கிறான்

சமணத்தில் மாரன் காமத்தை அளிப்பதுடன் சரி. கேவலஞானத்தைத் தடுப்பது அந்த ஆன்மாவின் சுயமேதான். [ஆடிப்பிம்பம்]

பௌத்ததில் கேவலஞானத்தை தடுப்பவன் மாரன்

ஜெ