‘எவர் பழிக்கோ துயர்சுமந்தாய். இனி தெய்வங்கள் சுமக்கட்டும் உன் பழியை. உன்னை நின்று வாட்டிய
அறம் நாண்கொள்ளட்டும். இனி இந்த வேளையில் இந்நகரின் அகல்சுடர்கள் அனைத்தும் நடுங்கி
அதிரட்டும். என் கண்ணே, என் அமுதே… உனக்கு முலைகொடுத்த மார்பில் அறைந்து சொல்கிறேன். உன் பழி இனி
இக்குடியில் என்றும் தொடரட்டும்!’ –
இன்னெதென்று விளக்க முடியாத ஒரு துயர் வந்து நெஞ்சையளுத்தி விழிகளைத்
துளிக்கச் செய்தது, எத்தனை முறை படித்த போதும்!! வெண்முரசில் பெயர் அறியா
பாத்திரங்கள் கொள்ளும் பேருருவங்கள் எப்போதும் மனதை நிறைப்பவை, குறிப்பாக செவிலி
அன்னையர். மாலினி, இளவரசி ருக்மணியின் செவிலி அன்னை வரிசையில் இன்று இணைந்தார்
ஆயுஸின் செவிலி அன்னை. மாமலர் அன்னையரின் காவியம் என்றால் இந்த அத்தியாயத்தில்,
சில பத்திகள் மட்டுமே வந்த இந்த அன்னையும் ஒரு மாமலரே.