பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
மாமலர்-35 அத்தியாயத்தில் வரும் இந்த வரிகள் ......
"துணைவி
என்பவள் தன் இன்னொரு பகுதி என்றே ஆகவேண்டியவள். எவளை அணுகும்போது இவளை
முன்னரே முற்றிலும் அறிந்திருக்கிறோம் என்று நமக்குத் தோன்றுகிறதோ அவளே நமக்கு உகந்த இல்லறத்தாள்.
அவள் நம்மை ஆட்கொள்வதில்லை. நம்மை தன்னில் இழுத்துக்கொள்வதுமில்லை. ஆம்,
நன்கறிந்தவள் என்பதனாலேயே சற்று சலிப்பூட்டுவாள். விரைவில் அவளை மறந்து
நாம் நாமென்றே அமையச்செய்வாள். வெளித்தெரியா வேர் மரத்தை ஊட்டி தாங்கி
உயிரென்றாவதுபோல் நம்முடன் இருப்பாள்.”
ஏனோ என்னையறியாமல் உங்கள் மார்ச் 6 -2017 பதிவை மீண்டும் மீண்டும் நினைக்கத்தூண்டியது!.மனத்தில் கொள்வது தானே எழுத்திலும் மிளிரும்?
அன்புடன்,
அ .சேஷகிரி.