உயிர் தன்னில் இருப்பதை
உடலால்
உணர
முடியாது,
அமைச்சரே.
ஏனென்றால்
உயிரை
உடல்
தான்
என்றே
எண்ணுகிறது.
ஆனால்
உடலின்
உச்சகட்ட
வலியில்
உயிர்
அதை
உதறி
கைவிட்டுவிடுகிறது.
உயிர்
உதறி
மேலெழுகையில்
ஒருகணம்
உடலால்
வெறும்
உயிர்
உணரப்படுகிறது.
ஒரு
நடுக்கமாக
அல்லது
துடிப்பாக
அல்லது
வேறு
ஏதோ
ஒன்றாக
அது
வெளிப்படுகிறது.
அந்த
உடலசைவு
ஒரு
சொல்…
குரூரமான ஒரு வரி இது. ஆனால் இதை என்னால்
உணரமுடிகிறது. நான் உயிரியல் ஆய்வாளன். ஆய்வுக்கூடத்தில் ஒவ்வொருநாளும் உயிர்களைக்
கொல்பவன். அந்தத் துடிப்பை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்/ அது ஏன் என்று யோசித்ததுகூட
உண்டு. அந்த கணத்தில் இணைந்திருக்கும் உயிரும் உடலும் இரண்டாகின்றன என நினைப்பேன்.
ஆனால் ஒருகணம் உடலற்ற உயிர் தூய வடிவில் நின்றிருக்கிறது அந்தக்கணத்தில் என்பது நடுக்கமூட்டும்
ஒரு கற்பனை
பாஸ்கர்