ஜெ
பீஷ்மரின் தன்னிலைவிளக்கத்தில்
ஒரு வரி முக்கியமானதாகப் படுகிறது. அதாவது பிறப்பால் மூத்தவன் என்று தர்மனை ஏற்கமுடியாது.
ஏனென்றால் அதைவிட மூத்தவன் இருப்பது பீஷ்மருக்குத்தெரியும். அதை அவர் அசலையிடமும் சூசகமாகச்
சொல்கிறார். தருமனை அரசன் என்றால் மீண்டும் ஒரு வாரிசுரிமைப்போர் வரும். அப்போது கர்ணன்
அரசனாக ஆகவேண்டியிருக்கும். அதுவேண்டாம், ஆட்சி குலநெறியின்படியே செல்லட்டும் என அவர்
முடிவெடுக்கிறார்
சபரி