ஜெ
நுட்பமான உடல்மொழி
வழியாக வெண்முரசு உணர்த்தும் ஓர் உலகம் உள்ளது. காட்சிகளாகவே அவை ஓடுகின்றன. அசலை துரோணரின்
நடத்தையில் ஒரு சின்ன மாறுபாட்டைக் காண்கிறாள். அது என்ன என்று தேடி அவள் மனம் கண்டுபிடித்துவிடுகிறது.
அவர் பதற்றமாக இருக்கிறார். ஆகவே அவருக்கு பீஷ்மர் சொல்லப்போவதென்ன என்று தெரிந்திருக்கிறது.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை துரோணர் பீஷமரை தன் பக்கம் இழுத்திருக்கவும்கூடும்.
பீஷ்மர் சொன்னதும் துரோணரின் விழிகள் மாறுவதும் அசலை அதை கண்டுகொள்வதுமெல்லாம் ஆழமான
இடங்கள். மனித மனம் எப்படியெல்லாம் சதுரங்கவிளையாட்டிலாடுகிறது என்று காட்டுபவை
மாதவ்