ஜெ,
திருதராஷ்டிரரின்
துயரத்தை வாசித்தபோது கலங்கிப்போனேன். பீஷ்மர் துரோணர் போன்றவர்களின் தயக்கமும் குழப்பமும்
புரிந்துகொள்ளக்கூடியவைதான். ஆனால் இது அப்படி அல்ல. கண் இழந்தவர். அவருடைய துக்கத்துக்கு
அளவே இல்லை. அவர் என்ன வகையிலே இதையெல்லாம் பார்க்கிறார் என்பதை எவராலும் புரிந்துகொள்ள
முடியாது. அவர் தன்னுடைய பிழைதான் அனைத்தும் என்று சொல்லும்போது ஒப்புக்குக்கூட அதை
மறுக்கப்போவதில்லை என்று அசலை சொல்லுமிடத்தில் என்ன குரூரமான வாள்வீச்சு என்ற எண்ணம்
ஏற்பட்டது.
எஸ்.சத்யமூர்த்தி