அன்புள்ள ஜெ
வெண்முரசு உருவாக்கும் சில நுட்பங்களை
ஒற்றை வரியாகவே வாசிக்கமுடிகிறது .முக்கியமான வரி என நான் நினைப்பது பாண்டவர்களின்
சீருடையை அணிந்துகொண்ட அரவான் முதல் முறையாக இன்னொரு வண்ணம் கொண்ட உடையை அணிவதாகச்
சொல்வது. அது அவனுடைய மாற்றத்தை மட்டும் அல்ல அவனுக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை
என்பதையும் காட்டுகிறது. அவன் களப்பலி ஆவதேகூட தன் அன்னைக்காகத்தான்
ஆனந்த்