Wednesday, August 22, 2018

போரும் அழிவும்




ஜெ

நான் மகாபாரதப்போரை இதுவரை பல வகைகளில் படித்திருக்கிறேன். சினிமாக்களிலும் டிவிகளிலும் பார்த்திருக்கிறேன். எதிலுமில்லாத ஒரு தீவிரத்தை வெண்முரசிலே பார்த்தேன். இது ஏன் என்று நான் யோசித்தேன். பிற கதைசொல்லும் முறைகளில் போரை ஒரு பெரிய விளையாட்டாகவோ அறமும் தீமையும் மோதும் களமாகவோ மட்டும்தான் காட்டுவார்கள். சாவு கூட ஒரு உணர்ச்சிநாடகமாக இருக்குமே ஒழிய கொடுமையாக இருக்காது. அந்த விளையாட்டு அம்சம் இருப்பதனால்தான் அவற்றை குழந்தைகளுக்குக் காட்டமுடிகிறது. உண்மையில் ஒரு போர் எப்படி இருக்கும்? அது  படுகொலை மட்டும்தானே? அங்கே இரக்கம் அன்பு எதுவும் இல்லை அல்லவா? வெண்முரசில் இந்தப்போருக்கான ஏற்பாடுகளைச் செய்வது படிப்படியாக விரிவாக காட்டபடுகிறது. அதற்குச் சமானமாகவே போருக்குப்பிந்தைய அடக்கமும் விரிவாகக் காட்டப்படுகிறது. ஆகவேதான் போர் வெறும் விளையாட்டு அல்ல அப்பட்டமான படுகொலை மட்டும்தான் என நமக்குத்தெரிகிறது

சரவணன்