Tuesday, August 21, 2018

திருதராஷ்டிரரின் உணர்ச்சிகள்




அன்புள்ள ஜெ

திருதராஷ்டிரரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் ஒரு விலங்கு போல மாறிவிட்டிருக்கிறார்.  அவருடைய சொந்த மகன்கள் அழிவார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும்  அவர் போரில் ஈடுபடுகிறார். கொந்தளிப்படைகிறார். அது மனமகிழ்ச்சி. அப்படியென்றால் அவர் ஏற்கனவே அந்த மனநிலையில் இருந்துகொண்டிருக்கிறார். இத்தனை நாள் போரைத்தவிர்ப்பதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஆனால் மனசுக்குள் அவர் போருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு மிருகம் ஏதோ ஆழத்தில் இருந்து வன்முறைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வெளிப்பாடு மிக ஆச்சரியம் அளிக்கிறது. இங்கிருந்து வாசித்துசென்று பழையகால அத்தியாயங்களில் இருந்து வேறு ஒரு திருதராஷ்டிரரை வாசித்தெடுக்கவேண்டியிருக்கிறது

ஜெயராமன்