Wednesday, August 22, 2018

போரின் பாதை




அன்புள்ள ஜெ

உத்தரன், ஸ்வேதன், சங்கன்ம் ,அரவான் ஆகியோரின் சாவும் ரோகிணியின் உடன்கட்டை ஏற்றமுமாக நாவல் ஒரு தீவிரமான முடிவை அடைந்துவிட்டது. போர்க்காட்சிகளை முன்னரே எதிர்பார்த்து எதிர்பார்த்து வந்ததனால் ஒருவேளை அவை சப்பென்று முடியுமோ என நினைத்தேன். அதோடு ஏராளமான போர்கள் ஏற்கனவே வந்துவிட்டன. அவற்றில் இல்லாத பல விஷயங்கள். மிக விரிவான படைசூழ்கை, செய்திப்பரிமாற்றம், காப்பு முறைகள் என போர்க்காட்சிகள் வந்தபோது இதுவே இதுவரை வந்தவற்றில் சிறந்தது என்ற எண்ணம் ஏற்பட்டது. போர்க்களக்காட்சிகளை கைநடுக்கம் இல்லாமல் வாசிக்கமுடியவில்லை.  பல இடங்களில் வாசிப்பை நிறுத்திவிட்டேன். மிகச்சிறிய எல்லைக்குள் அவ்வளவு திருப்பங்கள். நான் உத்தரனை பீஷ்மர் கொல்வார் என்றே நினைத்தேன். ஸ்வேதனையும் இதோ பீஷ்மர் கொல்லப்போகிறார் என்று நினைத்தேன். எல்லாமே திருப்பங்களாக இருந்தன. பதைப்புடன் போர்க்களத்தில் நிற்கவேண்டியிருந்தது. ஒரு பெரிய போரை எப்படி கனவு மாதிரி கண்ணெதிரே பார்ப்பது என வெண்முரசு காட்டிவிட்டது

ஆர். மாதவராஜ்