Tuesday, July 9, 2019

முகம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இதற்கப்பால் ஒரு ஆற்றலை அவன் அடைவதற்கு எந்த வழியும் இல்லை” என்றுதுரியோதனன் சொன்னான்கிருதவர்மன் “அரசேஇந்த முகம் அவன் முகமும் உங்கள்முகமும் மட்டும் அல்லஇது பிறிதொரு முகமும்கூட” என்றான்துரியோதனன்திகைப்புடன் பார்க்க கிருதவர்மன் “நாம் கிளம்புவோம்” என்றான்.

இன்னொரு முகம் என்னவென்று எனக்குத் தெரியுமே ஆனால் சொல்ல மாட்டேனே.

துரியோதனின் அச்சம்.  பீமனின் வஞ்சம்.  எதிர்கொள்ள கடினமானது அச்சம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து எழுவது போன்றது அதை எதிர்த்து எழுவது.  வஞ்சம் வானின்று இறங்குவது போலும்.  ஈர்ப்பு விசை அதற்கு துணை செய்கிறது.

அறம் என்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் என வட்டப்பாதை அமைத்துக் கொண்டு ஓடிவிளையாடிக் கொண்டிருக்கும் ஒன்று போலும்.  தன்னறம், மண்ணறம், பேரறம் என தன் சுற்றுவட்டப்பாதையில் பருவகால வேடங்கள் அணிவது போலும்.


அன்புடன்
விக்ரம்
கோவை