Friday, November 1, 2019

இமைக்கணம்



அன்புள்ள ஜெ,

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு வெண்முரசு செம்பதிப்பின் அடுத்த நாவல் இமைக்கணம் உங்கள் கையெழுத்துடன் இன்று கூரியரில் வந்தது. அட்டைப்படமாக மேகங்களினிடையில் மின் வெட்டும் காலச்சக்கரம். உள்ளே ஓவியங்கள் ஏதும் இல்லை. உள் அட்டையில் உங்கள் இளமையான புகைப்படம். (பழைய புகைப்படத்தில் ஒரு ஐரோப்பியப் பேராசிரியரைப் போல இருப்பீர்கள். புதிய படம் கன்னியாகுமரிக்காரரைப் போல மனதுக்கு நெருக்கமாகத் தோன்றியது!).

சொல்வளர்காட்டைப்போலவே (அதை விடவும்) குறைவான பக்கங்கள். ஆனால் வெவ்வேறு பாத்திரங்களுக்கான மெய்மையை பல நிகர்உலகுகளில் விரிக்கும் உத்தி இதை ஒரு பெரும் சாத்தியங்களின் தொகுப்பாக மாற்றுகிறது. நீர்ச்சுடரில் எஞ்சியவர்கள் அனுபவிக்கும் துயரும் வெறுமையும் எழுப்பும் 'இதெல்லாம் எதற்காக?' என்ற கேள்விக்கான பதிலை இமைக்கணத்தில் பொதிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தளத்தில் தினமும் வாசிக்கும்போது என்னால் எல்லாக் கருத்துக்களையும் முழுமையாகப்  புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பில் முயற்சிக்கவேண்டும்.

நன்றி.

அன்புடன்
S பாலகிருஷ்ணன், சென்னை.