Monday, December 22, 2014

காட்டருவி


ஜெ

இடும்பியின் குணச்சித்திரத்தை மிகமிக விரும்ப ஆரம்பித்துவிட்டேன். நான் காட்டுக்குச் செல்லும்போதெல்லாம் நினைப்பேன். காட்டில் இருந்து ஊறி வரும் அருவிகளும் ஓடைகளும் எல்லாம் எத்தனை தெளிவாக தூய்மையாக இருக்கின்றன என்று. நினைக்க நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும். காடு நம் மீது வைத்திருக்கும் அன்புதான் அப்படி வெளிப்படுகிறது என்று தோன்றும். காடு நம்மை முலையூட்டி வளர்க்கிறது. முலைப்பால் தூய்மையானது இல்லையா

இடும்பியை நீங்கள் அதிகமாக வர்ணிக்கவில்லை. ஆனால் இடும்பியின் குணச்சித்திரம் சுருக்கமாகவே நன்றாக வந்திருக்கிறது. அவளுடைய காதல் அம்மாவாக ஆனபின் உள்ள பொறுப்பு அடக்கம் எல்லாமே. மிகவும் பண்பான இனிமையான பெண்ணாக அவளை நினைக்க நினைக்க காட்டு அருவி என்ற எண்ணம்தான் வருகிறது. மகாபாரதத்தில் நீங்கள் இதுபரை எழுதிய எந்தக் கதாபாத்திரத்துக்கும் இந்த ஒரு தூய்மை வரவே இல்லை

சுந்தரம் மகாதேவன்