ஜெ,
வெண்முரசு பாஞ்சாலியை வர்ணித்துக்கொண்டே போகிறது. அவளைப்பற்றி நீங்கள் சொன்ன வர்ணனைகளை மட்டுமே ஒரு புத்தகமாகச் சுருக்கி போடலாமெ என்று நினைத்தேன். அவ்வளவு வர்ணனைகள். சூட்சுமமான காட்சிகள். மனசை உடலில் காட்டும் வர்ணனைகள்
ஆனால் அதில் மிகச்சிறந்த வர்ணனை இதுதான். அவளுடைய கரிய உடலின் அவுட்லைன் பளிங்கில் விழுந்த கூந்தல் முடியின் வளைவுபோல அவ்வளவு ஈஸியாகவும் நளினமாகவும் இருந்தது என்கிற இடம் . எண்ணிப்பார்க்கப்பார்க்க மனம் மகிழ்கிறது
ராஜு