ஆம். சகாதேவன் வந்தே விட்டான். இதைத் தான் எதிர்பார்த்தேன். "சகதேவனின் முகம் எப்போதுமே மலர்ந்திருப்பது. அவன் கண்களில் அனைத்தையும் அறிந்து விலகியவனின் மெல்லிய சிரிப்பு உண்டு." அருமையான அறிமுகம்.
அது என்னவோ இள வயதிலிருந்தே சகதேவன் மேல் விளக்கமுடியாத ஓர் விருப்பம் உண்டு. ஏனென்றே தெரியவில்லை. அதனாலேயே சகாதேவன் மகாதேவன் படம் மீது வெறுப்பு வேறு(சகதேவனை காமெடி பண்ணி விட்டார்களாம்!!!). நம் தமிழகத்தில் சகதேவன் என்ற பெயர் அவ்வளவு பிரபலமல்ல என்பது என் அபிப்பிராயம். எனக்கு தெரிந்து ஒரு தமிழ் நண்பர் கூட அப்பெயரில் கிடையாது. என் தந்தையின் மலையாள நண்பர்கள் சிலருக்கு அப்பெயர் உண்டு. பல மலையாள படங்களில் அப்பெயரில் கதாபாத்திரங்கள் வந்துள்ளன. என்ன காரணம் என்று தெரியவில்லை. நகுலனுக்கும் அதே நிலை தான்.... அப்பெயரும் கேரளத்தில் அதிகம்.
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.