Tuesday, December 1, 2015

வெண்முரசின் சிறுவர்கள்



ஜெ

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் சிறுவர்கள் ஆச்சரியமானவர்கள். காவியநாகயர்களை சிறுவர்களாக காண்பது ஒரு பெரிய அனுபவம். ஒவ்வொருவரும் இதில் பின்னாடி உருவாகும் குணாதிசயங்களை முன்னாடியே கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதோடு நிமித்திகர்கள் குறிப்புணர்த்திவிடுகிறார்கள்

இது லாஜிக்கலாக இல்லாமலிருக்கலாம். ஆனால் வாசகனுக்கு பின்கதை முன்னாடியே தெரியும் என்பதனால் இந்த குறிப்பு ஒரு பாய்ச்சலை உண்டுபண்ணி பெரிய அனுபவத்தை அளிக்கிறது. மேலும் இது ஒரு கேம்பிளே மாதிரி. என்ன நடக்கும் என்பதை சொன்னபின் அதைக்காட்டும்போது எதிர்பாராத விரிவை அளிப்பது

பாண்டுவும் திருதராஷ்டிரரும் பிள்ளைகளாக இருந்தபோது முதல் நினைவில் நிறையக்குழந்தைகள். அர்ஜுனன் தனிமையும் கூர்மையான கண்ணும் கொண்ட பிள்ளை. அபப்டியே இருக்கிறான் அபிமன்யூ. ஆனால் அடம்பிடிப்பவனாகவும் மூர்க்கமானவனாகவும் இருக்கிறான். சுருதகீர்த்தி உற்சாகமான வில்லாளி. சுஜயன் பெரிய விவேகி ஆகப்போகிறான். பீமன் சின்னவயசில் ஒரு குரங்கு போல இருந்தான்...

இபப்டி எவ்வளவு நினைவுகள். ஒரு 90 வயது வரை கூட்டுக்குடும்பத்திலே வாழ்ந்து முடிந்தபின் வரும் சலிப்பும் நிறைவும் உண்டாகிறது

சிவராம்