Friday, December 4, 2015

காண்டீபமெனும் ஊழ்



ஜெ

உங்கள் நாவல்கள் ஒவ்வொன்றும் முடியும்போது அதில் பல திரிகளாக ஓடிய கதைகளை எல்லாம் மனக்கண்ணில் கண்டு ஒன்றாகத்தொகுத்துப்பார்ப்பதற்கு நான் முயற்சிசெய்வேன். நிறைய தருணங்களில் நாவலை மானசீகமாக மீண்டும் வாசிக்குன்ற அனுபவத்தை அவைஅளிக்கும். இப்போதும் அதைச்செய்கிறேன்

அர்ஜுன்னுக்கு அறிவிழி கிடைக்குமிடத்திலே நாவல் ஆரம்பிக்கிறது. அதை வைத்து அவன் எதை அடைந்தான் என்பதுதான் முக்கியமான கேள்வி. அவன் அதைக்கொண்டுதான் பாதாள உலகத்தை கண்டான். நீருக்கு அடியில் வாழும் வேர்களின் உலகத்தைக் கண்டான். ஐந்து முதலைகளின் கதை ஒரு தியான அனுபவமேதான். பிராணன் கள் அவை இல்லையா

அவன் கடைசியாகக் கண்டடைந்தது நேமிநாதரை. அகிம்சையை. அதாவது அறிவிழியால் அவன் அடைந்தது காண்டிபத்தை விளையாட்டுச்சாமான ஆக்கிக்கொள்ளும் கனிவை

அப்படிப்பட்டவன் ஏன் மீண்டும் காண்டீபம் எடுத்தான்? கொலைக்காரன் ஆனான்? அதுதான் அடுத்த நாவல். அங்கே அவன் உரைக்கிற வஞ்சினம். அவன் நெட்டைமரம் போல சபையில் நிற்பதும் அகிம்சையை அடைந்ததனால்தானா? பல கோணங்களில் நினைக்கவைக்கிறது இந்நாவல்

காண்டீபம் விதி. அது தன் விருப்பப்படி எல்லாவற்றையும் கொண்டுசெல்லும்

சத்யநாராயணன்