அன்புள்ள ஜெ
நீண்டநாட்களாகக் கடிதங்கள் எழுதவில்லை. காரணம் தளத்தில் வெண்முரசு பற்றி வரும் கடிதங்கள்தான் . அவையெல்லாம் இருக்கும் உயரத்துக்கு நம்மால் எழுதமுடியாதோ என்று தோன்றியது. ஏனென்றால் அவை பலவகையான நுட்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தன. அவை எதையும் போல் என்னால் எழுதிவிடமுடியாது. நான் பொதுவாக நன்றாக இருந்தது பிரம்மாதம் என்றெல்லாம்தான் சொல்லவேண்டியிருக்கும்
ஆனாலும் பன்னிருபடைக்களம் முடிந்ததும் மீண்டும் சொல்லவேண்டும் என தோன்றியது. அவ்வளவு கேள்விகளுக்கும் நீங்கள் பதில்சொல்லிச்செல்லும் நுட்பம் மிகமிகக் கவனமாக வாசிக்கவேண்டியது. கேள்விகளை கொஞ்சம் பொறுமையாகத்தேடினாலே அடுத்தடுத்த அத்தியாயங்களில் கண்டுகொள்ளலாம்.
அதேபோல மகாபாரதம் பற்றி விளக்கமுடியாமல் இருக்கும் கேள்விகளைக்கூட வெண்முரசு விளக்கிச்செல்கிறது. தருமன் ஏன் சூதாடினான். பீஷ்மர் ஏன் பாஞ்சாலி துணியிரியப்பட்ட அந்தச் சபையே பேசாமலிருந்தார் என்பதெல்லாமே விளக்கப்படுவிட்டன
நான் பொறுமையாக இருப்பதாக முடிவுசெய்தேன். அடிக்கடி கேள்விகள் வரும். ஒருநாள் கழிந்து எழுதலாம் என்று நினைப்பேன். பதில் வந்துவிடும்
வேணுகோபால்