ஜெ
நேரடியான தத்த்வ விவாதங்களிலிருந்து விலகி உணர்ச்சிபூர்வமான கதைக்கு நாவல் சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தது. உச்சகட்டத்தில் முந்தைய நாவல் நின்றது. ஆனால் அதைச்சுற்றி நிகழ்ந்தபலவிஷயங்கள் வாசகனுக்கு முக்கியமானவை. அவற்றை எல்லாம் அப்படியே விட்டுவிட்டீர்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது. விடவில்லை என்று தெரிந்தது
ஆனால் அந்த உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் அனைத்திலும் கூடவே தத்துவார்த்தமான பார்வை வந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் கோரியதைத்தான் அடைந்தீர்கள் எண்று காத்யாயனர் சொல்லும் இடம் முக்கியமானது. பொதுவாகவே நாம் நம்மை நிரூபிக்கக்கூடிய வாய்ப்புள்ள இடங்களை நாடிக்கொண்டே இருக்கிறோம். அதிலும் தருமனைப்போன்ற அறசீலர்கள் அப்படி தங்களை வருத்தி நிரூபிக்க ஆவலுடன் இருப்பார்கள். நாலுபேர் செருப்பால் அடித்தால்தான் மகிழ்ச்சியே அடைவார்கள்
அந்த மனநிலைகளை எல்லாம் மிகச்சூட்சுமமாக அந்த அத்தியாயம் சொல்லிக்கொண்டே சென்றது
செல்வராஜ்