வணக்கம்
அருணாச்சலம் முன்னரே குருவிகள், மனதின், குறுகுறுக்கும் குற்ற உணர்வின் குறியீடு என்று அழகாக எழதியுள்ளார் http://tinyurl.com/j6ylr27
பீஷ்மரின் அறையிலும் ஒரு குருவி. மாற்று குடியானுக்கு (சௌனகருக்கு) உலர்ந்த பாக்காக தெரியும் குருவி. காசி இளவரசிகளை கை பற்றியதிலிருந்து, தன் குடியை காக்க, தவறுகளை ஒன்றொன்றாக செய்து விட்டு, மனதாழத்தில் உள்ள நியாய உணர்ச்சியை, குடி காக்கும் பொருட்டு, பழுப்பாக்கி, கெட்டியாக்கி, உலர்ந்த விட்ட பாக்கு.
அவையில் குரல் கொடுக்க முடியாததனால் குருவி சத்தம் இடுகிறது; படைகலச்சாலையில் துரியோதனை த்வம்சம் செய்கிறது. ஆனால், த்வசம் செய்ததனாலேயே, குருவி மீண்டும் சிறகடிக்கும், அவன் பக்கமே சாயும். தன் மீது இன்னொரு சுற்று பழுப்பை ஏற்றி கொள்ளும்.
தன் குடிகள் முழு அழிவை நோக்கி சென்றுவிட்டன, அழிவை சற்று தள்ளி வைப்போம் என்று, மேலும் துவர்ப்பாக, கடினமாக, உளளூர இருக்கும் வெண்மை முழுமையாக மறைய தொடங்கும், முற்றலான பாக்கு
சதீஷ்