Tuesday, August 2, 2016

சௌனகநீதி





அன்புள்ள ஜெ

சௌனகநீதி மகாபாரதத்தில் உள்ளது. அது ஆசையை அறுத்தலே விடுதலை என்ற ஒற்றைவரியாகச் சுருக்கத்தக்க ஒரு நல்லுபதேசக்கோவை. மிகப்பிற்காலத்தையது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வெண்முரசின் சௌனகநீதி நேரடியாகவே வேதங்களின் வேட்டல் என்னும் விஷயத்திற்கான விளக்கமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவரியாக எண்ணி எண்ணி எழுதப்பட்டதாக உள்ளது.

சிலசமயம் தோன்றும், உங்கள் வேலைப்பளு நடுவே அத்தியாயங்களை வேகமாக எழுதிவிடுவீர்களோ என்று. ஆனால் இதைப்பார்க்கையில் அப்படி எழுதிவிடமுடியாது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. எப்படித்தான் எழுதிவிட்டு வேலையும்பார்த்து வாழ்க்கையையும் அனுபவித்து கூடவே சண்டையும் போடுகிறீர்களோ தெரியவில்லை.

ஜெயராமன்