Thursday, August 11, 2016

வரவிருப்பது




வரவிருக்கும் நிலநடுக்கத்தை குழியெலி அறிவதுபோல இங்கு இருண்ட காட்டுக்குள் அமர்ந்து நான் இதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்

என்று திவாகரர் சொல்கிறார். வெண்முரசு தொடங்கும்போதே இந்த வரவிருக்கும் அழிவின் உள்ளுணர்வு வந்துவிட்டது. இத்தனை ஆண்டுக்காலம் அத்தனைபேரும் அதைத்தவிர்க்க நினைக்கிறார்கள். சிலர் அதைநோக்கிச் செல்லமுயல்கிறார்கள்

விதுரரும் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் அதைத்தவிர்க்க நினைக்கிறார்கள். குந்தி வரவேற்கிறாள். இப்போது பீஷ்மர் போன்ற சிலர் தவிர எல்லாருமே போருக்கான மனநிலைகளை அடைந்துவிட்டார்கள்.

போருக்கான சங்கு ஊதப்பட்டுவிட்டது

மகேஷ்