Tuesday, December 6, 2016

செயலின்மையின் இனிமை



 ஜெ

கீழ்க்கண்ட வரிகளை நான் பலமுறை வாசித்தேன். வெண்முரசின் அழகு இப்படி நம்மை வெளியேதள்ளும் அற்புதமான வரிகள்தான். அவை நம் மனதை பலதிசைகளில் விரியவைக்கின்றன.


செயலின்மையின் இனிமை ஒரு போதும் முழுமையாவதில்லை. செயலற்றவனைச் சூழும் ஆழுலகத்து தெய்வங்கள் அவனை முழுதும் இனித்திருக்க விடுவதில்லை. விழித்திருப்பவனின் இனிமை மட்டுமே தெய்வங்களுக்குரியது”

செயலற்று இருப்பதிலும் மிகவும் இனிமை உள்ளது. அந்த இனிமையை காடு நாவலிலும் எழுதியிருப்பீர்கள். ஆனால் குற்றவுணர்ச்சி இல்லாமல் அதை அனுபவிக்கமுடியாது. நடந்துக் களைத்து அமர்ந்து அனுபவிக்கக்கூடிய சோம்பல்தான் இனிமையானது

இசை மாதிரி விஷயங்கள் கூட சோம்பலுக்கு துணையாக இருந்தால் மிககீழான அனுபவமாக ஆகிவிடும் என்பதை நானே அறிந்திருக்கிறேன். என்குடும்பத்திலேயே சங்கீதச்சோம்பேறிகள் பலர் இருந்தார்கள்

ஆர். ராகவன்