ஜெ
இப்போது வரும்
எல்லா அத்தியாயங்களுக்கும் ஒரு சிறுகதைத்தன்மை இருந்துகொண்டிருக்கிறது. பிரகதியை காந்தாரி
சந்திக்கச்செல்வதிலிருந்து தொடங்கி அச்சந்திப்பினூடாக வந்து அவள் வாசிப்பை நிகழ்த்துவதுவரை
ஒரு நீண்ட சிறுகதைபோலிருக்கிறது. சிறுகதையின் டிவிஸ்ட் என்பது அவளிடம் அதன்பின்னரும்
சொல்லப்படாமல் ஏதோ எஞ்சியிருந்தது என்பது. ஒரே ஊழகத்தின் இருமுனையிலும் அவர்கள் இருவரும்
இருந்தனர் என வெண்முரசு சொல்கிறது. அந்த நிலைக்குப்பினாலும் அந்தச்சொல் எஞ்சியிருக்கிறது.
அது ஒரு உச்சம்
திருதராஷ்டிரர்
காந்தாரியிடம் அப்படி ஒரு சொல் மிச்சம் வைத்திருப்பது மறுபடியும் நீளும் கதையிலே தெரிகிறது
மனோகரன்