Thursday, January 4, 2018

மேல்கோன்மை



அன்புநிறை ஜெ,

புதுவருட வாழ்த்துகள். நான்கு வருடம் நிறைவுகண்ட தங்கள் பெருவேள்விக்கும் வாழ்த்துகள். 

சில நாட்கள் முன்பு எழுத நினைத்து மறந்த ஒன்று:

வெண்முரசில் 
அழகிய பல புதிய தமிழ் சொற்கள் வருவது புதிதல்ல. எனில்  'மேல்கோன்மை' என்ற சொல் நினைவில் அவ்வப்போது மேலெழுந்து வருகிறது.
//அஸ்தினபுரியின் படையுதவியால்தான் அது இன்று அப்பகுதியில் சற்றேனும் மேல்கோன்மை கொண்டுள்ளது//
முன்பொரு முறையும் இச்சொல்லை எழுதியிருக்கிறீர்கள்.

அழகான பிரயோகம் -  'கை ஓங்கியுள்ளது' அல்லது 
'ஆதிக்கம் பெற்றுள்ளது' என்றெல்லாம் கூறினால் இந்த 
'Supremacy' தொனிக்கவில்லை. 

வேறு யாரேனும் கையாண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளதா?

வான் வழங்கிய சிறுதுளி கடல் சூழக் கருக்கொண்டு முத்தென முகிழ்ப்பது போல தமிழிலிருந்து மறைந்துபோய் மலையாளம் பொத்தி வைத்த தூய தமிழ் வார்த்தைகளுள் ஒன்றா இது?

வசந்த கீதங்களில் 
'மாமாங்கம் பலகுறி கொண்டாடி' பாடலில் வரும் 'சாமூரி கோலோத்தெ மேல்கோய்மையும்' என்ற வரி இதேபோன்ற பொருளில் அமைந்தததா?

மிக்க அன்புடன்,
சுபா


அன்புள்ள சுபா

அது மலையாண்மையில் மேக்கோன்ம [மேல்கோன்மை] மலையாளத்தில் மேல்கோய்ம. மூலம் தமிழ்தான். ஆனால்  அவ்வடிவில் புழக்கத்தில் இல்லை. கோன்மை உள்ளது

புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஜெ